Saturday, November 14, 2009

மும்பையில் வருணாவின் வண்ண மழை!

நவ.14,2009 : coverage in vikatan - http://youthful.vikatan.com/youth/Nyouth/varuna141109.asp

குழந்தைகள் தினத்தையொட்டி, மும்பையில் உள்ள நேரு சென்டர் ஆர்ட் கேலரியில் ஓவியக் கண்காட்சி நடத்துவதற்கு இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில் ஒருவர்... சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி எஸ்.வருணா!


சென்னை - கோட்டூர்புரத்தைதிலுள்ள ஏ.எம்.எம். மெட்ரிகுலேஷனின் படிக்கும் எஸ்.வருணா மற்றும் புனேவைச் சேர்ந்த ஹரிஸ் கான் என்ற மாணவன் ஆகியோரின் ஓவியப் படைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கண்காட்சி, மும்பை - நேரு சென்டர் ஆர்ட் கேலரியில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வண்ணமிகு கண்காட்சியைத் 'தாரே ஜமீன் பர்' படத்தின் கதாசிரியர் அமோல் குப்தே தொடங்கி வைத்தார்.



கண்காட்சியை அலங்கரித்தப் படைப்புகளைக் கண்டு வியந்த அமோல், வருணா மற்றும் ஹரிஸுடன் அவர்களது ஓவியங்கள் குறித்து கலந்துரையாடினார்.

வருணாவின் அர்த்தம் பொதிந்த ஓவியங்களும், அதன் நேர்த்தியும் தன்னை ஆட்கொண்டதாகக் கூறினார், கதாசிரியர் அமோல்.

ஒன்பதரை வயதேயான வருணாவுக்கு, இது பத்தாவது ஓவியக் கண்காட்சி!

அன்னை தெரசா தனது கைகளில் வெள்ளைப் புறாவை வைத்திருக்கும்படியான ஓவியத்தைப் பற்றி வருணா விளக்கியதை, பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

பெற்றோரின் வழிகாட்டுதலோடு தனது இரண்டு வயதிலேயே ஓவியம் தீட்டத் தொடங்கிய வருணா, இக்கலையை முறைப்படி தொடர்ந்து கற்று வருகிறார்.



இந்த ஓவியக் கண்காட்சி இம்மாதம் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியில் ஓவியங்களை ரசித்து மகிழலாம்!

வருணாவின் வலைப்பதிவில் வலம் வர... http://artistvarunastudio.blogspot.com/

2 comments:

சதங்கா (Sathanga) said...

வாழ்த்துக்கள் வருணா.

artistvaruna said...

nanri